அனைவருக்கும் சொதந்திர தின வாள்துகள் ....அப்படின்னு டமில் டிவி காரய்ங்க சொன்னத மல்லாக்க படுத்துகிட்டே கேட்டு சொதந்திரத்த கொண்டாடின இண்டியன் சிட்டிசன்களே, வணக்கம் . அதே மாதிரி நான் படுத்து கிட்டே கண்ட கனவு (பகல்) இந்த 64 வருசத்துல இந்தியா எவ்வளவு மாறிடுச்சுப்பா.. நெனக்கவே சந்தோசமா இருக்கு ..எல்லா அரசியல் கட்சி தலைவருகளும் சேந்து கொடி ஏத்துராய்ங்க..கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மிட்டாய் குடுக்குறாரு ..(ஆஹா இதுவல்லவோ அரசியல் நாகரிகம்..)அந்த அம்மாவும் மிட்டாய் சாப்பிட்டுட்டு தமிழக அரசின் திட்டங்களின் சிறப்புகளையும், அத இன்னும் நல்லா develope பண்ண ஐடியாவும் கொடுத்து பேசுறாங்க ..
அதிலிருந்து சில பிட்டுகள் :
மாண்பு மிகு மைனாரிட்டி அரசு ... sorry (பழக்க தோஷம் )தமிழக முதல்வர் டாக்டர்,முத்தமிழ் அறிஞர் ,கலைஞர், கருணாநிதி (போதும்மா ரொம்ப லென்தா போயிட்டிருக்கு ... ) அவர்களே ..உங்கள் ஆட்சி ஒரு நல்ல ஆட்சி,
இந்தியாவில் குஜராத்திற்கு பிறகு முழு மதுவிலக்கு அமல் படுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் உருவாகிட நம் திராவிட அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகம் மதுவும் புகையும் இல்லா மாநிலமாக உள்ளது.
மகாத்மா காந்தியை தவிர தமிழகத்தில் யாருக்கும் சிலை வைக்க வேண்டாம்(கண்ணகி உட்பட..) என தாங்கள் நேற்று அறிவித்ததை நானும் வரவேற்கிறேன்.
காந்திக்கும்,பெரியாருக்கும் பிறகு அதிக காலம் "தம்" மக்களுக்காக உழைத்த தலைவர்
இந்தியாவிலேயே நீங்கள் மட்டும்தான், உங்கள் ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக நான் இருப்பதற்கு மகிழ்வடைகிறேன்
பெரியாரின் பகுத்தறிவும்,அண்ணாவின் செயல்திறனும் ஒருங்கே உள்ள உத்தமராம் தங்கள் அரசை விமர்சிக்க இந்த எளியவளுக்கு வயதில்லை அதனால் தங்களை வணங்கி விடை பெறுகிறேன்
நன்றி வாழ்க இந்தியா .
அடுத்து முதல்வர்:
முதற்கண் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்..
மாண்பு மிகு எதிர்கட்சி தலைவி சகோதரி, தங்க தாரகை, டாக்டர்,
செல்வி ஜெயலலிதா அவர்களே .. தமிழகத்தில் இரண்டு (தி மு க ,அ தி மு க) கட்சி களை தவிர வேறு கட்சிகளே இல்லாத பற்றாக்குறையை போக்க, என் வேண்டுகோளுக்கிணங்க கட்சி தொடங்கிய தம்பி விஜயகாந்த் அவர்களே, அனைவருக்கும் வணக்கம்...
வாரிசு அரசியலில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லாததாலும்,வயது முதிர்வு காரணமாகவும் ஆட்சியையும்,கட்சியையும் கலைக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் எதிர்கட்சி தலைவியும் என் சகோதரியுமான ஜெயலலிதா வேண்டாம் என்று கூறிய ஒரே காரணத்தினால்..அவர் அன்புக்கட்டளையை மீற முடியாமல் நான் இன்னும் என் மக்கள் பணியை தொடர்கிறேன்.
நாம் பெரியாரின் பாசறையில் இருப்பவர்கள் ஆனாலும் காந்தியின் குழந்தைகள் என்பதை மறக்கக்கூடாது. காந்தியின் சத்திய சோதனையும், பெரியாரின் புத்தகங்களையும் இளைஞர்கள் படித்து பயனுற வேண்டும்.
நான் இந்த ஆண்டு முதல் என் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்(சகோதரி ஜெயலலிதாவின் அனுமதியோடு ) .
நான் எவ்வளவோ முயற்சித்தும் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் பசுமை தாயகம் மூலம் தமிழகத்தில் இது வரை 2 கோடி மரக்கன்றுகளை நட்ட டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு "பசுமை பெரியார்" விருது வழங்குவதில் நான் மகிழ்வடைகிறேன்.
தமிழீழம் மலர்ந்த ௦10 வது ஆண்டு விழாவிற்கு செல்ல தம்பி வைகோ தலைமையில்
10 பேர் கொண்ட குழுவை அனுப்ப ஒரு மனதாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.
நன்றி....
அப்பன் பண்ண தப்புல .. திருப்பாச்சி பாட்டு(சொதந்திர தின சிறப்பு படம் ) ..சத்தம் கேட்டதும்.. ங்கோயால கனவா...
வாழிய பாரத சமுதாயம் வாழ்கவே.. வாழ்க.. வாழ்க..
Monday, August 16, 2010
என் இனிய இண்டியன் சிட்டிசன்ஸ்
Friday, August 13, 2010
பஸ் பயணமும் விஜய் படமும்
கொடும கொடும ன்னு சொல்லுவாங்கல்ல .. அட எனக்கும் அதாங்க நடந்துச்சு, நானும் எங்கம்மா அப்புறம் எங்க குடும்பமும் ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரம் போனோங்க ., பஸ்ல போகும்போதும் ஜாலி ஆ இருக்கணும்னு டிவி உள்ள பஸ்ஸா பாத்து ஏறினோம் . எங்கம்மாவுக்கு விஜய்னா புடிக்கும்(அவுங்க விஜய் படம் பாத்தது இல்ல ) , விஜய் நடிச்ச (பேசுற )குருவி ன்னு ஒரு படம் போட்டாய்ங்க ,அடடா படம்னா இதான்யா படம் .விஜய் ஓபனிங் சீன ஒண்ணுக்காகவே படம் 100 நாள் ஓடிருக்கும் .ங்கொய்யாலே சாக்கடைக்குள்ள இருந்து எநதிரிகிறதெல்லாம் ஓபனிங்காடா.. கவுண்டமணி பாணில சொன்னா.. டேய் நீ நல்லாவே இருக்கமாட்டேடானுதான் சொல்லணும். ஆனா உன்னால எங்க அம்மா இப்பல்லாம் டிவி ல கூட உன் பாட்டெல்லாம் பாகிறது இல்லைடா. ஐயா இதான் கொடுமைன்னா ,கோயில்ல சாமிலாம் கும்புட்டு ,கடல்ல தலை முழுகிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தா , வில்லுன்னு ஒரு படம் போடறாய்ங்க ..நானும் சரி பாவம்பா விஜய், இந்த படத்தில நல்லா பண்ணிருப்பாருன்னு நம்பி நானும் பாத்தேன்யா. ஆனா ங்... நான் திட்ட விரும்பல ..
விஜய் சார் ,நீங்க எப்படி படத்துக்கு கதை, கஸ்மாலம் லாம் கேட்டு ஒத்துப்பிங்க.. அட இவரு பரவால்லப்பா ,இந்த காசு போடுற புரொட்யுசெர்கல்லாம் எப்படிய்யா கோடிகள்ள காசு போடுறிங்க ..யோவ் என்ன மாதிரி ஆள்கிட்ட உங்க 30 கோடி 40 கோடியை குடுங்கையா . நான் டபுள் ஆக்கி தர்றேன் ,நான் 5 கோடி 10 கோடி சம்பளம் கேக்க மாட்ட்டேன்யா.. நீங்க பாத்து 50 லட்சமோ 60 லட்சமோ குடுங்க போதும்.
now back டு விஜய் ,இப்ப புதுசா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு ப்ளான் பண்றாராம் .. மறுபடியும் கவுண்டமணி மாமாவை தான் கூப்பிடனும் ,மாமா சொல்லுங்க ..
"கையில கொஞ்சூண்டு காசு இருந்தா கட்சி ஆரம்பிப்பிங்க அப்புறம் கலைச்சுருவிங்க .." மாமா onemore பஞ்ச் ப்ளீஸ்,விடமாடிங்களே.. "கூறு கேட்டவன்லாம் கொள்கைய பத்தி பேசுறான்யா ....போதுமாப்பா " போதும் மாமா..
எனக்கு இன்னொரு டவுட்டுங்க ,நம்மூர்ல திருட்டு VCDயை தான் ஒழிக்க முடியல , அதை பஸ்லயாவது
போடாம பாதுக்க்கங்கப்பா. ஏம்பா vcd சப்லையர்ஸ் விஜய் படத்துக்கு மட்டுமாவது vcd ரிலீஸ் பண்ணாதிங்கப்பா ....பாக்க முடியலை.
ஆனா நான் ஒரு முடிவு பண்ணிடேண்யா...இனிமே டிவி இருக்க பஸ்ல போமாட்டேன் .
விஜய் சார் ,நீங்க எப்படி படத்துக்கு கதை, கஸ்மாலம் லாம் கேட்டு ஒத்துப்பிங்க.. அட இவரு பரவால்லப்பா ,இந்த காசு போடுற புரொட்யுசெர்கல்லாம் எப்படிய்யா கோடிகள்ள காசு போடுறிங்க ..யோவ் என்ன மாதிரி ஆள்கிட்ட உங்க 30 கோடி 40 கோடியை குடுங்கையா . நான் டபுள் ஆக்கி தர்றேன் ,நான் 5 கோடி 10 கோடி சம்பளம் கேக்க மாட்ட்டேன்யா.. நீங்க பாத்து 50 லட்சமோ 60 லட்சமோ குடுங்க போதும்.
now back டு விஜய் ,இப்ப புதுசா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு ப்ளான் பண்றாராம் .. மறுபடியும் கவுண்டமணி மாமாவை தான் கூப்பிடனும் ,மாமா சொல்லுங்க ..
"கையில கொஞ்சூண்டு காசு இருந்தா கட்சி ஆரம்பிப்பிங்க அப்புறம் கலைச்சுருவிங்க .." மாமா onemore பஞ்ச் ப்ளீஸ்,விடமாடிங்களே.. "கூறு கேட்டவன்லாம் கொள்கைய பத்தி பேசுறான்யா ....போதுமாப்பா " போதும் மாமா..
எனக்கு இன்னொரு டவுட்டுங்க ,நம்மூர்ல திருட்டு VCDயை தான் ஒழிக்க முடியல , அதை பஸ்லயாவது
போடாம பாதுக்க்கங்கப்பா. ஏம்பா vcd சப்லையர்ஸ் விஜய் படத்துக்கு மட்டுமாவது vcd ரிலீஸ் பண்ணாதிங்கப்பா ....பாக்க முடியலை.
ஆனா நான் ஒரு முடிவு பண்ணிடேண்யா...இனிமே டிவி இருக்க பஸ்ல போமாட்டேன் .
Thursday, August 12, 2010
ரஜினி டம்மி பீசா?
அன்பார்ந்த தமிழ் மக்களே, sorry ரஜினியை வாழ வைக்கும் தமிழ் மக்களே, எந்திரன் இசை சும்மா அதிருதுல்ல .முன்னலாம் ரஜினி என்ன பேசுனாலும் பிரச்னை பண்ணாங்க, இப்பல்லாம் அவரு தன்ன பத்தி பேசலன்னு பிரச்னை பண்றாங்க. அதாவது ரஜினி சார் ரொம்ப தன்னடக்கத்தோட நடக்கறது அவரு ரசிகர்களுக்கு புடிக்கலயாம்,அதுவும் உண்மைதான். இப்ப பிச்சனை என்னன்னா சன் டிவி எந்திரன் படத்தை வாங்கிருக்க்காயங்கே அவிய்ங்கே எப்படி வெளம்பரம் பண்ணுவாங்கன்னு ஊருக்கே தெரியும். சன் பிக்சர்ஸ் வழங்கும், கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் கண்டிப்பா ரஜினி டம்மி பீஸ் ஆயிடுவாரு. இப்படித்தான் விஜயை டம்மி ஆக்குனாங்க, அடுத்து சூப்பர் ஸ்டாருக்கும் ஆப்பு ரெடி.Apple store ல எந்திரன் பாட்டு தான் அதிகமா டவுன்லோட் பண்ணாங்களாம் (ஒரு தமிழ் ,இந்திய பாட்டு முதல் இடத்த புடிக்கிறது இதான் 1st time ) .இது ரஜினி அப்புறம் ரஹ்மான் இவங்க ரெண்டு பேராலதான்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா இது ஏதோ சன் டிவி யோட சாதனை மாதிரித்தான் சன் டிவி ல சொல்றாய்ங்க. இதெல்லாம் இப்பவே ரஜினியும் அவரு ரசிகர்களும் கேக்கலேன்னா, எந்திரன் கலாநிதி மாறன் படம் ஆயிறும், ரஜினி டம்மி பீஸ் ஆயிடுவாரு .
Subscribe to:
Posts (Atom)