கொடும கொடும ன்னு சொல்லுவாங்கல்ல .. அட எனக்கும் அதாங்க நடந்துச்சு, நானும் எங்கம்மா அப்புறம் எங்க குடும்பமும் ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரம் போனோங்க ., பஸ்ல போகும்போதும் ஜாலி ஆ இருக்கணும்னு டிவி உள்ள பஸ்ஸா பாத்து ஏறினோம் . எங்கம்மாவுக்கு விஜய்னா புடிக்கும்(அவுங்க விஜய் படம் பாத்தது இல்ல ) , விஜய் நடிச்ச (பேசுற )குருவி ன்னு ஒரு படம் போட்டாய்ங்க ,அடடா படம்னா இதான்யா படம் .விஜய் ஓபனிங் சீன ஒண்ணுக்காகவே படம் 100 நாள் ஓடிருக்கும் .ங்கொய்யாலே சாக்கடைக்குள்ள இருந்து எநதிரிகிறதெல்லாம் ஓபனிங்காடா.. கவுண்டமணி பாணில சொன்னா.. டேய் நீ நல்லாவே இருக்கமாட்டேடானுதான் சொல்லணும். ஆனா உன்னால எங்க அம்மா இப்பல்லாம் டிவி ல கூட உன் பாட்டெல்லாம் பாகிறது இல்லைடா. ஐயா இதான் கொடுமைன்னா ,கோயில்ல சாமிலாம் கும்புட்டு ,கடல்ல தலை முழுகிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தா , வில்லுன்னு ஒரு படம் போடறாய்ங்க ..நானும் சரி பாவம்பா விஜய், இந்த படத்தில நல்லா பண்ணிருப்பாருன்னு நம்பி நானும் பாத்தேன்யா. ஆனா ங்... நான் திட்ட விரும்பல ..
விஜய் சார் ,நீங்க எப்படி படத்துக்கு கதை, கஸ்மாலம் லாம் கேட்டு ஒத்துப்பிங்க.. அட இவரு பரவால்லப்பா ,இந்த காசு போடுற புரொட்யுசெர்கல்லாம் எப்படிய்யா கோடிகள்ள காசு போடுறிங்க ..யோவ் என்ன மாதிரி ஆள்கிட்ட உங்க 30 கோடி 40 கோடியை குடுங்கையா . நான் டபுள் ஆக்கி தர்றேன் ,நான் 5 கோடி 10 கோடி சம்பளம் கேக்க மாட்ட்டேன்யா.. நீங்க பாத்து 50 லட்சமோ 60 லட்சமோ குடுங்க போதும்.
now back டு விஜய் ,இப்ப புதுசா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு ப்ளான் பண்றாராம் .. மறுபடியும் கவுண்டமணி மாமாவை தான் கூப்பிடனும் ,மாமா சொல்லுங்க ..
"கையில கொஞ்சூண்டு காசு இருந்தா கட்சி ஆரம்பிப்பிங்க அப்புறம் கலைச்சுருவிங்க .." மாமா onemore பஞ்ச் ப்ளீஸ்,விடமாடிங்களே.. "கூறு கேட்டவன்லாம் கொள்கைய பத்தி பேசுறான்யா ....போதுமாப்பா " போதும் மாமா..
எனக்கு இன்னொரு டவுட்டுங்க ,நம்மூர்ல திருட்டு VCDயை தான் ஒழிக்க முடியல , அதை பஸ்லயாவது
போடாம பாதுக்க்கங்கப்பா. ஏம்பா vcd சப்லையர்ஸ் விஜய் படத்துக்கு மட்டுமாவது vcd ரிலீஸ் பண்ணாதிங்கப்பா ....பாக்க முடியலை.
ஆனா நான் ஒரு முடிவு பண்ணிடேண்யா...இனிமே டிவி இருக்க பஸ்ல போமாட்டேன் .
Examples in Italy embrace Villa Farnese 카지노사이트 and Villa Giulia, and within the US the Newport Casino in Newport, Rhode Island
ReplyDelete