Wednesday, September 1, 2010

TO நீயா நானா team

இந்த வாரம் நீயா நானாவில், பிளாக்கர்கள் எல்லாம் முகம் தெரியாதுன்றதால இஷ்டத்துக்கு எழுதுறாங்க ..திட்டுறாங்கன்னு கோபி சொன்னார்.
அது தான் சார் ஜனநாயகம் , எல்லாரும் அவரவருக்கு சொல்ல வேண்டியது சொல்லணும் . நீயா நானா மாதிரி எங்க வீட்டுல நாய்க்குட்டி வளக்கலாமா ? பூனைக்குட்டி வளக்கலாமா ? ன்னு பேச ப்லோக்கேர்கள் தேவை இல்லை..

  • ஞாநி மாதிரி ஒரு அரசியல் எழுத்தாளர் ஆனந்த விகடன், குமுதம், கல்கின்னு பந்தாடபடுறதுக்கு யார் காரணம்? நீயா நானா வில் சொல்ல முடியுமா ?
நான் சில தலைப்புகள் தர்றேன் இதை எல்லாம் நீயா நானா வில் பேச முடியுமா?

  • ஈழம் அடுத்து செய்ய வேண்டியது அரசியல் தீர்வா? சமூகதீர்வா?
  • தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மன்னராச்சியா?
  • தமிழ் நாட்டில் மதுக்கடைகள் அவசியமா? இல்லையா?
  • MP  கள் சம்பளத்தை தாங்களே நிர்ணயிப்பது சரியா? தவறா?
  • IAS  அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டுபட்டிருப்பது சரியா? தவறா?
  • பெட்ரோலுக்கு 49 % வரி விதிக்கும் அரசு, சினிமா வுக்கு வரிவிலக்கு அழிப்பது சரியா? தவறா? 
  • ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் சரியா ?
  • தமிழ் மீனவர் சுடப்படுவதை  தடுக்க என்ன வழி?

இதில் ஒரு  தலைப்பில் நீயா நானா வால் பேச முடிந்தால் நான் மற்றும் ப்ளாக்கர்கள்
 யாரையும் திட்ட மாட்டோம்..
எல்லாத்துக்கும் மேலே , அநாகரிகமா யாரும் ஏதும் சொல்லல, உண்மையை சொல்றோம் ..நீயா நானா மாதிரி சமூக அக்கறை இல்லாமல் எங்களால் இருக்க முடியாது.

மகாநதி படத்துல கமல் சொல்ற மாதிரி "எல்லாரும் ஒன்னுக்கு போகும் போது நானும் கொஞ்சம் போனா கூவம் நாதம் தான் அடிக்கும் "

மொதல்ல உப்பு சப்பு இல்லாத டாபிக்கை பேசுறதை நீங்க நிப்பாட்டுங்க சார்..

13 comments:

  1. Arumai Arumai
    by
    http://thambivadivazhagan.blogspot.com/

    ReplyDelete
  2. "தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மன்னராச்சியா?"

    indha topic lam kandippa varave varadhunga!!! vote pottachu

    ReplyDelete
  3. டம்மி பீஸா இருந்தாலும் அருமையான தலைப்புகள்.
    அமைப்பாளர்களுக்கு..
    "தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பவர்கள் ஆளுங்கட்சியினரா? எதிர் கட்சியினரா?"
    சம்பந்தமுள்ளவர்களை வைத்து நடத்திப்பாருங்கள் அதுதான் உண்மையான நீயா? நானா??

    ReplyDelete
  4. இதை இத இதைத்தான் எதிபார்த்தேன்.... சும்மா ஒரு கோட்டை போட்டுக்கிட்டு, உப்பு சப்பு இல்லாத, எதையோ சொல்லிக்கிட்டு திரு. கோபி அவர்கள் நீயா ? நானா ? நடத்துவார். நீங்கள் சொல்லும் ஒரு தலைப்பில் நீயா ? நானா ? நடத்துவார் என்றால், நான் மனதார அவருக்கு தலை வணங்குவேன்.... அப்படி இல்லாமல் சும்மா ஒரு சப்பை கட்டு கட்டுவதற்கு, ஒரு பெண்கள் கூட்டம், ஒரு ஆண்கள் கூட்டம் கூட்டி வந்து நேரத்தை வீண் செய்யும் திரு. கோபி அவர்களுக்கு நான் என்ன சொல்லுவது... என்றாவது ஒரு நல்ல தலைப்பில் உங்களால் ஒரு நிகழ்ச்சி செய்ய முடியுமா? என்ற கேள்வியை நான் நண்பர் டம்மி பீஸ் சார்பாகவும், என் சார்பாகவும் கேட்கிறேன் ..... நன்றி...... பாலா.........

    ReplyDelete
  5. "தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மன்னராச்சியா?"
    இதுக்கு எடுக்கு பாஸ் விவாதம்?

    ReplyDelete
  6. கோபி த‌ன்னை ந‌ன்றாக‌ விற்றுக் கொண்டிருக்கிறார்.
    ந‌ல்ல‌ பொருள் விற்ப‌த‌ல்ல‌ அவ‌ர்/அவ‌ரை அம‌ர்த்தியுள்ள‌ நிறுவ‌ன‌த்தின் நோக்க‌ம். விற்ப‌னையாகும் பொருளை விற்று, வியாபார‌ அபிவிருத்தி செய்வ‌து தான் தொழில். டிஆர்பி ரேட்டிங் கூட்டினால், விள‌ம்ப‌ர‌ம்/ப‌ண‌ம் கூடும். அத‌ற்கு ஆட்டு ம‌ந்தைக‌ளை கூட்டி வ‌ந்து,இர‌ண்டாய் (க‌ணவ‌ன்/ ம‌ணைவி, அப்பா/பிள்ளை தனித்த‌னியாய்)பிரித்து, ஏப்ர‌லுக்கு அடுத்த‌ மாதம் எதுன்னு? முத‌ல் அணியை கேட்பார். விள‌ம்ப‌ர‌ பிரேக்!! ஜுன்னுக்கு முத‌ல் வ‌ரும் மாத‌ம் எதுன்னு? எதிர் அணியைக் கேட்பார். ம‌றுப‌டி விள‌ம்ப‌ர‌ பிரேக்!!! இர‌ண்டு அணிக‌ளும் 'மே,மே,மே"ன்னு க‌த்துவாங்க‌.அதிபுத்திசாலி (சாரு மாதிரி) நடுவ‌ர்க‌ள் வ‌ந்து, அது "மே" இல்லை,' May ' ன்னு தீர்ப்பு சொன்ன‌தும், ம‌ந்தை/ச‌ந்தை, சிரித்து/அழுது க‌லைந்து விடும். டிவி க‌ல்லா க‌ட்டிவிடும்.மீண்டும் ச‌ந்திப்போம்...ம்..ம்

    ReplyDelete
  7. //ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் சரியா//


    அவன் அவன் ஒட்டு போட்ட டிவி தரன் கம்புட்டர் தரேன் இன்றான்
    இங்க பணம் பத்தி பேசறீங்க

    ReplyDelete
  8. சார் அந்த ப்ரோக்ராம் முழுசா பார்த்தீங்கன ,ஒன்னு புரியும் .... இந்த நிகழ்ச்சில கலந்துகிட்ட பிளாக்கர் ஓனே ரெண்டு பெற தவிர யாரும் ப்ளோக்கிங் ஓட உண்மையான உபயோகத்த சொல்லல .... சாட்டிங் , ஓர்குட் , சோசியல் நெட்வொர்கிங் ... இத பத்தி தான் பேசினாங்க .... ப்ளோக்கிங் ஓட கருத்து சுதந்திரம் பற்றி மக்களுக்கு சொல்ல பிளாக்கர் விட்ட வேற யாரும் இல ..... இத நாம புரிஞ்சுக்கணும். இந்த ஒரு ஆயுதம் தான் முழு பலத்துடன் இருக்கு , இதோட
    சக்தி மக்களுக்கு புரியவைக்கறது நம்ப கடமை.

    ReplyDelete
  9. சத்யராஜ் ஒரு படத்துல கேப்பாரு கோட் போட்டுட்டு வந்தா எத வேணும்னாலும் கேபியானு.ஈழம் பிரச்சனைய பத்தி பேச துப்பு இல்ல.TRP Rating மட்டுமே வச்சு நிகழ்ச்சி நடத்துற கோபிநாத்துக்கு ஒன்னே ஒன்னு கேட்டுகுறன்...முதல நீங்க இங்கிலீஷ் பேசுறது எனக்கு இங்கிலீஷ் நல்லா பேச தெரியும் பாருங்க ....பாருங்க சொல்ற மாதிரி இருக்கு.முதல நீயா நானா முழுவதும் இங்கிலீஷ் கலக்காம ஒரு நிகழ்ச்சி நடத்துங்க.வாய திறந்த ஒன்னு வரத்து survey இல்லனா மொக்க ஆங்கிலம்.

    ReplyDelete
  10. //ஈழம் அடுத்து செய்ய வேண்டியது அரசியல் தீர்வா? சமூகதீர்வா?
    தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மன்னராச்சியா?
    தமிழ் நாட்டில் மதுக்கடைகள் அவசியமா? இல்லையா?
    MP கள் சம்பளத்தை தாங்களே நிர்ணயிப்பது சரியா? தவறா?
    IAS அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டுபட்டிருப்பது சரியா? தவறா?
    பெட்ரோலுக்கு 49 % வரி விதிக்கும் அரசு, சினிமா வுக்கு வரிவிலக்கு அழிப்பது சரியா? தவறா?
    ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் சரியா ?
    தமிழ் மீனவர் சுடப்படுவதை தடுக்க என்ன வழி?//

    நெத்தியடி

    ReplyDelete
  11. ஜனங்க பார்க்கறாங்க. அதுக்கேத்த மாதிரி அவரும் வியாபாரம் செய்றாரு. எல்லாமுமே வியாபார நோக்கம் தான். பணம்... பணம்... பணம்...
    பிணத்தை அடக்கம் செய்ய கூட வேண்டுமே பணம் நண்பா!

    பணம் தான் எல்லாத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

    நீங்கள் சொல்லும் தலைப்புகளில் கருத்து பரிமாற்றம் நடக்க வேண்டுமானால், மக்கள் அவைகளை விரும்பும் வண்ணம் அறிவு பெற்றிருக்க வேண்டும். பார்ப்போம் காலம் கணியாமலா போய் விடும்!!!

    ReplyDelete