Thursday, December 23, 2010

நல்ல வேளை பெரியார் சொன்னத யாரும் கேக்கல

 அஜித் சொல்ற மாதிரி I am back,... எல்லா பயலுகளுக்கும் வணக்கம் .. ௧,௭௬,௮௨௯ ..... என்னடா இவன் ஊனா வா எழுதிருக்கானேனு பாக்குறிங்களா . நான் ஒரு தமிழன்னு ( எங்க ஊரு திருநெல்வேலி பக்கம் அப்டின்னா நான் தமிழன் தானா?  தமிழன் னா கோபால புரத்துல இருக்கவுங்க மட்டுந்தானா? )இப்பிடிலாம் பண்ணிதான் prove பண்ணனும் .. ஏன்னா லெமூரியா கண்டத்தில் இருந்தே தமிழகத்தில் தமிழன் தமிழ் என்று சொல்லும் உரிமை கருணாநிதிக்குதான் உண்டு ன்னு வாலிபக்கவிஞர் சொன்னதா கேள்வி பட்டேன் . நாம இப்பிடியாவது prove பண்ணலாம்ல ..

1 ,76 ,329 கோடி ய தான் தமிழ்ல சொன்னேன் , ஏன்னா குவாட்டருக்கு கூட கருணாநிதி பேரன் தமிழ் பேரு வசுட்டாருல்ல .. அந்த அளவுக்கு தமிழ் பற்றுள்ள குடும்பம் எப்பிடி தமிழன்களுக்கு துரோகம் பன்னுவாங்கே.. ஏய் சீ .. இதுக்குதான் யா பாராட்டு விழா ரொம்ப பாக்க கூடாதுன்றது ..

2012 ன்னு ஒரு படம் பாத்திருப்பிங்க ..அதுல scientist கேரக்டர்   climax சீன்ல  சொல்லுவாரு "மனித கலாச்சாரத காப்பாத்த நாம எல்லாருமே சில கஷ்டமான முடிவுகள எடுத்திருக்கோம் நாம மனிதர்கள்னா ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும் கலாச்சாரம்னா மனித இனமே ஒண்ணா சேர்ந்து சிறந்த வாழ்கையை உருவாகனும்னு அர்த்தம், ஆனா இதுக்கு எல்லாம் நேர் மாறா மனித தன்மையை இழந்து கலாச்சாரத்த மறந்து இந்த மாதிரி ஒரு காரியத்த செஞ்சுகிட்டு இருக்கோம் . நாம குழந்தைகளுக்கு இத தான் கலாச்சாரம்னு சொல்லி குடுக்க போறோமா?.."
இது படத்துல வர்ற வசனம் ...
நம்ம குழந்தைங்க நாளைக்கு .. நம்மள பாத்து " ஏம்பா இலங்கைல 1,76000௦௦௦ தமிழன்கல கொன்னப்போ நீ என்ன பண்ண? ன்னு கேட்டா " "ஏம்பா 1 ,76000  கோடி ய கொள்ளை அடிச்சு தமிழன் பேர கெடுத்தானே அவன நீ என்ன பண்ண ?" அப்டின்னு கேட்டா நாம என்ன சொல்லுவோம் ?..மகனே உங்க அப்பன் வெந்தத  தின்னுட்டு வேடிக்கை பாத்து ,உன்ன பெத்தேண்டா ..என்னால வேற என்ன பண்ண முடியும் னா.... சொல்லுவோம்..


  • இவ்ளோ காசு அடிச்சுட்டு ஒருத்தன் நம்ம முன்னாடி ராஜா மாதிரி இருக்கான்.. அவன உள்ள போட்டாலும் தியாகி மாதிரி தான் இருப்பான். அத வச்சு கருணாநிதி ஒட்டு வாங்குனாலும் வாங்குவாரு ...
  • ஒன்ற லட்சம் கோடிய அடிச்சத தமிழனோட சாதனை ன்னு ,கலைஞர் அரங்கத்துல கருணாநிதி பேசத்தான் போறாரு .. அத கேட்டு இத்து போனவைங்கே கை தட்டைதான் போறாங்கே ..
  • அப்புறம் தீவிர தி மு க காரன் ன்னு எவனாவது இருந்திங்கன்னா .. தயவு செஞ்சு விலகிருங்க .. ஏன்னா .தமிழ் நாட்டுல தமிலன்னாலும், தி மு க ன்னாலும் கருணா குடும்பம் தான், அவிங்கே குடும்பத்து காரங்கேலே 234 தொகுதிலயும் நிப்பாங்கே(குடும்ப போட்டோ பாதேன்யா .. அடேங்கப்பா அஞ்சாறு பஸ் வேணும் போல.. கனிமொழி ராசாத்தி யும் சேத்தா கவுன்சிலர் போஸ்ட் கூட எவனுக்கும் கெடக்காது ). அதனால தி மு க ல இருந்தா .. வெண்கல கிண்ணம் கூட கெடைக்காது .. 
  • இந்த ராசா பய புள்ள .. கஜானா ல தான் கைய வச்சானே .. பாவம் இந்த வெவசாயி பயலுக, அவிங்கே எடத்தயுமா ஆட்டைய போடணும்..  இதுக்காகவே உன்னல்லாம் .... நம்ம நாட்டுல அதெல்லாம் பண்ண முடியாது..
  • எனக்கென்ன வருத்தம்னா ராஜா ஆட்டைய போட்டது ஏதோ இத்தாலி காரன் காசு மாதிரி எவனும் கண்டுக்காம அவனவன் வேலைய பாத்துட்டு மூடிட்டு இருக்கிங்களே . எப்பா அது நம்ம காசு ப்பா. உன் வீட்டுக்குள்ள புகுந்து ஒருத்தன் 1000 ரூவா திருடிட்டா மட்டும் திருட்டு ... இது .. உங்கள எல்லாம் "வாயில ஒரு செருப்ப கவ்வ குடுத்துட்டு ,இன்னொரு செருப்ப சாணில முக்கி உச்சாந்தலைல நச்சு நச்சு ன்னு அடிக்கனுமா டா..." 
  • ஒன்ற லட்சம் கோடி ய பயமில்லாம ,குற்ற உணர்வு இல்லாம எடுக்குரான்னா . நம்ம நாட்ட அவன் மதிக்கல .இது தேச துரோகம், இங்க சோத்துக்கு இல்லாம தீவிரவாதியும் ,சமூக விரோதியும் உருவாக காரணமான இவன் யாரு? (இவன் அப்டின்றது ராஜா மட்டுமில்ல ராடிய, மற்ற எல்லாரும் தான் ).
  • இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு சொன்னா.. வாயால சிரிக்க மாட்டங்கே .. இங்க தின கூலி,கொத்தடிமை யும் இருக்கு .. உலக பணக்காரர் பட்டியலில் இடமும் இருக்கு . அடிப்படையிலேயே .. இங்க சமத்துவம் இல்ல .. அத செய்ய முடியாத 60 வருசமா தரகு வேல பாத்த காங்கிரஸ் ..அமெரிக்கா வுக்கும் இத்தாலிக்கும் காட்டி குடுக்க தான் செய்யுது .
  • என்னை பொறுத்த வரை பிஜேபி 100 மடங்கு நல்ல கட்சி... காங்கிரஸ் இந்திய மதங்களை மையமா வச்சு தான் அரசியல் பண்ணிட்டு இருக்கு.. இறையாண்மை, மதசார்பின்மைனா உண்மைலேயே என்ன அர்த்தம் ன்னு காங்கிரஸ் கு தான் வெளிச்சம். நரேந்திர மோடி ஒரு இந்துத்வா கொள்கை உடையவரவே இருந்தாலும் . அவர் தேச துரோகி கிடையாது சிறந்த முதல்வர்.. நமக்கு தான் இன உணர்வும் கிடையாது நாட்டு உணர்வும் கிடையாதே . இங்க ஊழல் பண்ணா அவன் தலித் ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறது ....அம்பேத்கர் என்ன தலித் கள் ஊழல் செய்ய திரண்டு வாரீர் னா  சொன்னாரு ...


 பெரியார் சொன்னத கேக்காத தால தமிழ் நாடே இன்னிக்கு அமைதி பூங்காவா இருக்கு.. ஒரு வேள பெரியார் சொன்ன பகுத்தறிவு மட்டும் தமிழன் மண்டைல ஏறி இருந்தா .. அவனவன் ரோட்ல எறங்கி போரட்டம்ல நடத்தி இருப்பாங்க.. ..இப்ப தான் இலங்கை தமிழனுக்கே அறிவு வந்து ராஜா பக்ஷே வ அடிச்சு வெரட்டிருக்காங்கே.. இங்க உள்ள தமிழன்களுக்கு அறிவு வர இன்னும் எவ்ளோ நாள ஆகும்னு தெரியல ..

பெரியார் சொனன இன்னொரு மேட்டரு .. நாத்திகம் .. இது தமிழன் மண்டைல ஏறாம போனது . ரொம்பவே நல்லதுபபா... ஏன்னா . ஒரு பூ கட்டுற அம்மா இன்னிக்கு நான் அம்பது ரூபா சாம்பாதிக்கிறது போதும். நான் தப்பு  செஞ்சா சாமி தண்டிக்கும் ன்னு நெனச்சு தான் . வாழ்க்கை ய ஓட்டிட்டு இருக்காங்க.. எவன் தப்பு பண்ணாலும் கடவுள் தண்டிப்பாரு நம்ம வேலைய பாத்து கஞ்சி குடிப்போம் ன்னு நெனக்கிறாங்க .. இவங்க எல்லாம் நாத்திகரா மாறி இருந்தாங்கன்னா .

ஒரு பய வேள பாக்க மாட்டங்கே .. சாமி கண்ண குத்துரதா.. டேய் அந்த ராசா பய புள்ளய குத்துங்கடானு கெளம்பிருப்பங்கே...நாடு அமைதியாவே இருந்திருக்காது ...  அதான் சொன்னேன் பெரியார் சொன்னத கேக்காதது நல்லது. கேட்டிருந்தாதான் சூடு, சொறன வந்து இருக்கும்ல ..அதெல்லாம் நமக்கு எதுக்கு ...

Thursday, September 23, 2010

நடுநிலை மீடியா

 இன்னைக்கு தமிழ் நாட்டுல இல்லாத விஷயங்கள்ல இதுவும் ஒன்னு... நடுநிலைமை  பத்திரிகை ஜனநாயகம் னும் சொல்லுவாய்ங்க   .பத்திரிகை கள் தான் எல்லாத்தையும் விமர்சனம் பண்ணுவாய்ங்க  நாம கொஞ்சம் வித்தியாசமா பத்திரிகைகளையே விமர்சனம் பண்ணுவோம் ..
ஆனந்த விகடன் :
 82  ஆண்டு பழமை வாய்ந்த ஆனந்த விகடனை நான் விமர்சிக்கும் நிலை வந்ததே கஷ்ட காலம்தான் , சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே பல எதிர்ப்பு களை சந்தித்த ஆனந்த விகடனே தற்போது  நடு நிலையா இருக்கான்னா .. கேள்விக்குறிதான். 1987 ம் ஆண்டு அன்றைய ஆசிரியர் ஒரு துணுக்கு  வெளியிட்டதற்காக உள்ளே போடப்பட்டார் ( விகடன் பொக்கிஷம்  பார்க்க..22 / 9 / 2010 ) .இன்று அரசியல் விமர்சனம் அப்டின்றது ..ஏதோ நானும் இதை விமர்சிக்கணும் அப்டின்ற அளவுல தான் இருக்கு ..ஒ பக்கங்கள் மட்டும் தான் உருப்படியா இருந்தது அதையும் .. சில பேர் மிரட்டினதால நிறுத்திட்டாங்க (அது குமுதம் போய் இப்போ கல்கி ல வந்து நிக்குது .அங்க எவ்லோ நாள்னு தெரியல ..) ஒரு சினிமா ல  மட்டும் .direction சரியில்லை , கேமரா மேன் சரியில்லைனா வாரி எடுப்பாங்க .. ஆனா இங்க அரசியல் விமர்சனம் ன்னு வந்தா மட்டும்  ஐயையோ நாமளும்  எதாச்சும் சொல்லணுமே ன்னு வாய்க்குள்ளேயே முனுமுனுப்பாங்க. .உதாரணத்துக்கு  ஈழம் ஆகட்டும், ஓட்டுக்கு காசு குடுக்குறதாகட்டும், கள்ள ஒட்டு போட்டதாகட்டும்.. ஏதோ பொண்டாட்டிய கொஞ்சுற மாதிரி யே  எழுதுவாங்க . ஆனந்த விகடனை பொறுத்த வரை சினிமா வையும்(த்ரிஷா நாய்க்குட்டி பேர் மணி .. ),மத்த  இலக்கியத்தையும்!? வச்சு பொழப்ப ஓட்டிட்டு  இருக்காங்க ஒட்டிருவாங்க ..
குமுதம் :
ஆனந்த விகடன் மாதிரி இல்லன்னாலும் ,இதுவும் பழம்பெரும் பத்திரிக்கை தான் .. குமுதம் எப்பவுமே advanced தான் ..ஆனந்தவிகடன் த்ரிஷா நாய்க்குட்டி பேரு சொன்னா .. குமுதம் ல அந்த நாய்க்கு அம்மா பேரு என்ன , த்ரிஷா நாய்க்கும் ரெண்டு கண்ணுதான்பா.. ன்ற அளவுக்கு உருப்படியான தகவல்களை சொல்லுவாங்க .
அப்பறம் சினிமா காரங்களுக்குள்ள சண்ட மூட்டி விடற வேலைய தான் தன் ஜனநாயக கடமையா செய்ஞ்சிட்டு இருக்கு. முன்னல்லாம் இது ஒரு அ தி மு க  (தேர்தல் சமயத்துல மட்டும் , )ஆதரவு பத்திரிகை ன்னு சொல்லுவாங்க , ஆனா இப்ப குமுதம் ஆசிரியரோ எடிட்டரோ ஊழல் பண்ணிட்டாருன்னு  ஒரு பிரச்சினை வந்து அது கலைஞர் ஐயா வர போச்சு ...அதுக்கப்புறம் ஒரு தி மு க ஆதரவு பத்திரிகை மாதிரி தெரியுது(செம்மொழி மாநாட்ட பத்தி ஓவரா புகழ்ந்தது குமுதம் மட்டும் தான் ... ஞாநி கல்கிக்கு மாறுனாரு, கலைஞர் ஏதோ தொடர் எழுதுறாரு ..)  இன்னும் மேட்டர்  இருக்கு பா ...
  • தமிழ் நாட்டுல சும்மாவே ஜாதிய பத்தி பேசமாட்டாய்ங்க .. இதுல குமுதம் வேற நான் தமிழன்ன்னு(வாரா வாரம் .. ஒரு ஜாதிய பத்தி எழுதினாங்க ,என்ன கொடுமைன்னா தமிழ் மராத்தி ,தமிழ் மலையாளின்னு புதுசு புதுசா ஜாதி பேரு சொன்னாய்ங்க.. )  நாட்டுக்கு தேவையான தொடர்லாம் எழுதுவாய்ங்க . இந்த சாமியார்(நம்ம நித்தியானந்தா தான்..) ஒன்னு எழுதினாருபா, அவரு பேமஸ் ஆனதுக்கு நம்ம குமுதமும் காரணம். 
  • ஆனந்த விகடன பொறுத்த வரை நெறைய அரசியல் இல்லாத உருப்படியான விஷயங்கள் வரும்(இளைஞர்கள கொஞ்சம் கவர் பண்ற மாதிரி முயற்சி பண்றாய்ங்க, ஆனா அரசியல் மட்டும் இளைஞர்கள் மண்டைக்குள்ள ஏறாம கவனமா பாத்துக்குறாய்ங்க .. ).. so  அரசியலை ஒதுக்கிட்டு பாத்தா ஆனந்த விகடன் படிக்கலாம் ,ஆனா குமுதம் அதுவும் இல்லாம இதுவும் இல்லாம கொஞ்சம் கஷ்டம்தான் ..
  • ஆனா நடு நெலமை அப்டின்னு வந்தா மட்டும் ரெண்டுமே ஒன்னு தான்.. 
  • நக்கீரன் அப்டின்னு ஒரு பொலனாய்வு  பத்திரிகை வருது .. ஆனா அவிய்ங்க என்ன பொலனாய்வு பண்றாய்ங்கண்ணா.. சாமியாரின் மன்மத லீலைகள், பாதிரியாரின் லீலைகள் ன்னு ஒரு மாதிரியான மேட்டரா போட்டு தான் பொழப்பு நடத்துறாய்ங்க . இதுல என்னன்னா சாமியார் படம், இதர பிட்டுகள்  முழுசா பாக்கனும்னா வெப்சைட் மெம்பர் ஆகணும் (எப்பிடியெல்லாம் மெம்பர்ஷிப் பிடிக்கிறாய்ங்க) .. கோபால் சார் நீங்க காட்டுக்கு போய் வீரப்பன கண்டுபிடிச்சதெல்லாம் சரிதான், ஆனா நாட்டுக்குள்ள இருக்க வீரப்பன எல்லாம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ..இப்ப புதுசா புண்ணாக்கு புலிகேசின்னு வடிவேல நம்பி போயிருக்கு நக்கீரன் ..
  • போதுங்க மத்த தினகரன், தின மலர் , எல்லாம் வணிக நோக்கமுள்ள பத்திரிகைகள் தான் .. இதுக்கு மேல எனக்கும் கை வலிக்குது.. நெறைய எழுத  மறந்தும்  போச்சு நம்ம பத்திரிகைகள் மாதிரியே எனக்கும் ..

Sunday, September 12, 2010

திமுக குடும்பமும்,காங்கிரஸ் குடும்பமும்

காங்கிரஸ் இயக்கம் :     காங்கிரஸ் வெள்ளைகாரனால் ஆரம்பிக்கப்பட்ட  கட்சி, அன்றைய பண்ணையார்கள்,ஜமீன்தார்கள்,பணக்காரர்களால் பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்ட கட்சி, அப்படின்றதுலாம் மாறி  காந்தி ன்ற NRI  வந்தா பின்னாடிதான் பட்டி தொட்டிக்கெல்லாம் காங்கிரஸ் பரவ (தெரிய) ஆரம்பிச்சது. நேதாஜி,லாலா லஜபதிராய்,சர்தார் படேல்,தாகூர்(பழைய ஸ்கூல்  புக்ல படிங்கப்பா..) அப்படின்னு பலரால் வளர்க்கப்பட்ட கட்சி. சுதந்திரம் இந்தியாவை  நெருங்க நெருங்க பல தலைவர்கள் மறைஞ்சு நேருவும் ,ஜின்னாவும் முன் நின்றார்கள் .வெள்ளைக்காரன் வெவகாரமான சுதந்திரத்த குடுத்தப்ப காந்தி விரும்பாத போதும்(நம்மூர்ல பெரியாரும் விரும்பல..)  ஜின்னா பாகிஸ்தானின் தந்தை யாகவும் , நேரு இந்தியப்   பிரதமராவும்(காந்தியை மீறி நேருவால இந்திய தந்தையா ஆக முடியல, அதனால காந்தின்ற பேர வாரிசுகளுக்கு வச்சுட்டார். ) ஆனாங்க. காங்கிரஸ் நேரு குடும்ப சொத்தானது
     
 திமுகழகம் (குடும்பம்): அண்ணா,எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், அன்றைய இளைஞர்கள் அப்படின்னு ஒரு மாபெரும் கூட்டமே சேர்ந்து உருவாக்கிய ஒரு அரசியல் இயக்கம் தான் இந்த திமு கழகம். பெரியார் மணியம்மையை துணைவியாக அறிவித்தபோது(இதுவும் ஒரு காரணம்.. )  ரத்தத்தின்  ரத்தங்களான அண்ணா,கருணாநிதி(இத கண்ணீர்த் துளிகள் அப்படின்னு  பெரியார்  சொன்னார்.. )   பலர் திராவிடர் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிச்சாங்க. ஹிந்தி எதிர்ப்பு, தமிழ் உணர்வுன்னு பல போராட்டங்கள் பண்ணி வளர்ந்து ஆளும் கட்சி ஆகவே உருவெடுத்தது  ...இது வரலாறு . அண்ணா, எம்.ஜி.ஆர் ,எஸ்.எஸ்.ஆர்,இன்னும் பல தலைவர்கள்(ராஜாஜி மாதிரி பார்ட் டைம் திராவிட தலைவர் உட்பட .. ) ,ஒரு எழுச்சி மிகு இளைஞர் கூட்டம் எல்லாம் இருந்தும் திமுக படிபடியாக கருணாநிதியின் குடும்ப சொத்தானது ஒரு வேதனையான, மோசமான, ஜனநாயகத்திற்கு மாறான ஒரு சரித்திரம் (கருப்பு சரித்திரம்) . அண்ணாவின் வாரிசு யாரும் அரசியல்லையோ சினிமா லையோ இல்ல .எம் ஜி ஆர் பத்தி தெரியும், எஸ் எஸ் ஆர் அரசியல்லயே இல்ல,எனக்கு தெரிஞ்சு வேற எந்த திராவிட தலைவரோட(தி மு க உதயமானதுக்கு காரணமான ..) வாரிசுகளும் அரசியல்ல இல்ல.  கருணாநிதி தன்னை விட செல்வாக்கா கட்சியில் யாரும் இருக்ககூடாது ன்றதுல கவனமா இருந்தார்.கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரை கட்சில இருந்து நீக்கினார் (அது கருணாநிதி செய்த வரலாற்று பிழை, அதனால 13 வருஷம் வனவாசம் இருந்தார். ) ,அடுத்து வைகோ வை நீக்கினார் (வைகோ பெரிய ஆளா வந்திருக்க வேண்டியவர் ) .ஒரு கட்டத்துல கருணாநிதி பேச்சிற்கு எதிர் பேச்சு இல்லாத அளவுக்கு திமுக மாறியது. இன்னைக்கு அண்ணா அறிவாலயம் யாரோட பில்டிங் ன்னு கேக்க முடியாது.திமுகவையும் தான்.இன்னைக்கு அவர் குடும்பம் சம்பந்தபடாத துறையே தமிழ் நாட்டுல இல்ல,(சிலர் இந்திய அளவில் போய்ட்டாங்க).

  • ஆரம்ப கால திமுக காங்கிரசுக்கு எதிரி யாக இருந்தாலும் , கொள்கைல கருணாநிதி நேருவ தான் follow  பண்றாரு.
  • இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா ன்னு கேக்காதிங்க....தகவல் அறியும் சட்டம் மாதிரி எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க .. இது ஏன் நடந்தது அப்படின்னு யோசிங்க அதான் முக்கியம் ...இன்னொரு விஷயம் நான் சொன்னா மாதிரியே இன்னைக்கு நாய்க்குட்டி வளர்க்கலாமன்னு நீயா நானா நடத்துறாங்க ..பாருங்க வேற வழி ..

Thursday, September 2, 2010

அரசியல் கேரளா VS தமிழ்நாடு

 கேரளா
தெய்வதிண்டே ஸ்வந்தம் நாடே .. ஏ இது தமிழ் ப்ளாக் பா.. ஐயோ நான் தமிழன் கோ ..அய்யய்யோ நான் தமிளங்கோ ...மேட்டருக்கு வருவோம்
  •   நான் திருவனந்தபுரத்துல இருந்த சமயம், முதல்வராக (அன்றைய)எ.கே அந்தோனி இருந்தார். அப்போ எதிர்கட்சி (கம்யுனிஸ்ட்) மாணவரணி (நிஜமான மாணவரணி)ஒரு ஊர்வலம்  நடத்துனாங்க..ஏடா ஓடா அந்தோனி, நசிபிக்கள்ளே எங்கலே..அப்டின்னு கேரள தலைமை செயலகம் முன்னடியே   கோசம் போட்டுட்டே போனாங்க.
  • தினம்  இரவு 8.30 க்கு முதல்வர் வீட்டுக்கு போவார் ..அதுவும் ஒரு அம்பாசடர் கார்ல தனியா(பாதுகாப்புக்கு கூட கட்சி ஆளுங்க இருக்க மாட்டாங்க )போவார் ,
  • சமீபத்துல கமல் ஹாசனுக்கு கேரள அரசு சார்பா பாராட்டு விழா நடத்துனாங்க .. அதுல ஒரு நடிகர் கூட கலந்துக்கல .இது எல்லாருக்கும் தெரியும் (கேரளா முதல்வர் இருந்தும்..) .
இப்போ மொதோ சம்பவத்த பாருங்க ..தமிழ்நாட்டுல முதல்வர எதிர் கட்சி தலைவரே பேர் சொல்லி கூப்பிட முடியாது (கலைஞர் ன்றது நீங்க படிச்சு வாங்குன பட்டமா? ), அதுக்காக எடா ஓடா ன்னு நான் கூப்பிட சொல்லல ..அங்க இருக்க அரசியல் ஜனநாயகத்த  பத்தி சொல்றேன் ...இன்னமும் சொல்லனும்னா அங்க இருக்க டிவிகள்   நடத்துற talk shows பாத்திங்கன்னா அரசியல்வாதிகளை பிரிச்சு மேஞ்சிருவாங்க .. அவுங்க CM  முன்னாடியே CM  யை கிண்டல் பண்ணி மிமிக்ரி பண்ணுவாங்க ..
அடுத்து இங்க முதல்வர் வீட்டுக்குள்ளயே தனியா இருக்க முடியாது ..வெளில போனா கும்பலா கார் இல்லாம போகவே முடியாது ..
இன்னொரு விஷயம் .. நம்ம  வீட்டுக்கு விருந்தாளி வந்தா வரவேற்கலாம் .. நாமலே போனா அது தேவை இல்லை.. கேரளாவுல அப்படிதான் ,அங்க முதல்வர் கொச்சின் வந்தாலும் ,கொல்லம் வந்தாலும் பெரிய வரவேற்பு பொதுக்கூட்டம், பேரணி,இருக்காது .. ஆனா தமிழ் நாட்டுல , தமிழ் நாட்டு முதல்வர்(முதல்வர் மட்டும் இல்ல ..) தமிழ் நாட்டுக்குள்ள மதுரைக்கோ ..கோவைக்கோ ..வந்தா ஏன் வானுயர்ந்த 
கட் அவுட் ,ஊரெல்லாம்  டியுப் லைட், பேரணி பொதுக்கூட்டம் ன்னு படுத்துராங்கன்னு தெரியலப்பா..

பாராட்டு விழா , இதப்பத்தி நான் சொல்லவே வேண்டாம்..கமலுக்கு பாராட்டுவிழா நடந்த அதே நாள் ல இங்க ஒரு முதல்வர் கலந்துகிட்ட விழா நடந்துச்சு (கலைஞர் நகர் ...), அதுக்கு ரஜினி மட்டும் வராம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்.. அவர் வீடு கார் தாக்கப்படும், அவர் தமிழர் இல்லன்னு கலைஞர் முரசொலி ல எழுதுவாரு..
ஆனா.. கேரளாவுல எந்த நடிகரும் தாக்கப்படல..

அதுக்காக அங்க அரசியல்வாதிகள் புள்ள பூச்சின்னு நெனக்காதிங்க .. அங்கயும் தவறுகள் நடக்கும் ..ஆனா இங்க வார்டு கவுன்சிலர் பண்றத தான் CM  பண்ண முடியும்..

 நான் எப்பவும் சொல்ற மாதிரி ... கேரளா வுல அரசியல்வாதியா இருகிறதும் ஒண்ணுதான் ,தமிழ் நாட்டுல பொது ஜனமா .. இருகிறதும் ஒண்ணுதான் ரெண்டு பேருக்குமே மரியாதையே இருக்காது .

Wednesday, September 1, 2010

TO நீயா நானா team

இந்த வாரம் நீயா நானாவில், பிளாக்கர்கள் எல்லாம் முகம் தெரியாதுன்றதால இஷ்டத்துக்கு எழுதுறாங்க ..திட்டுறாங்கன்னு கோபி சொன்னார்.
அது தான் சார் ஜனநாயகம் , எல்லாரும் அவரவருக்கு சொல்ல வேண்டியது சொல்லணும் . நீயா நானா மாதிரி எங்க வீட்டுல நாய்க்குட்டி வளக்கலாமா ? பூனைக்குட்டி வளக்கலாமா ? ன்னு பேச ப்லோக்கேர்கள் தேவை இல்லை..

  • ஞாநி மாதிரி ஒரு அரசியல் எழுத்தாளர் ஆனந்த விகடன், குமுதம், கல்கின்னு பந்தாடபடுறதுக்கு யார் காரணம்? நீயா நானா வில் சொல்ல முடியுமா ?
நான் சில தலைப்புகள் தர்றேன் இதை எல்லாம் நீயா நானா வில் பேச முடியுமா?

  • ஈழம் அடுத்து செய்ய வேண்டியது அரசியல் தீர்வா? சமூகதீர்வா?
  • தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மன்னராச்சியா?
  • தமிழ் நாட்டில் மதுக்கடைகள் அவசியமா? இல்லையா?
  • MP  கள் சம்பளத்தை தாங்களே நிர்ணயிப்பது சரியா? தவறா?
  • IAS  அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டுபட்டிருப்பது சரியா? தவறா?
  • பெட்ரோலுக்கு 49 % வரி விதிக்கும் அரசு, சினிமா வுக்கு வரிவிலக்கு அழிப்பது சரியா? தவறா? 
  • ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் சரியா ?
  • தமிழ் மீனவர் சுடப்படுவதை  தடுக்க என்ன வழி?

இதில் ஒரு  தலைப்பில் நீயா நானா வால் பேச முடிந்தால் நான் மற்றும் ப்ளாக்கர்கள்
 யாரையும் திட்ட மாட்டோம்..
எல்லாத்துக்கும் மேலே , அநாகரிகமா யாரும் ஏதும் சொல்லல, உண்மையை சொல்றோம் ..நீயா நானா மாதிரி சமூக அக்கறை இல்லாமல் எங்களால் இருக்க முடியாது.

மகாநதி படத்துல கமல் சொல்ற மாதிரி "எல்லாரும் ஒன்னுக்கு போகும் போது நானும் கொஞ்சம் போனா கூவம் நாதம் தான் அடிக்கும் "

மொதல்ல உப்பு சப்பு இல்லாத டாபிக்கை பேசுறதை நீங்க நிப்பாட்டுங்க சார்..

சூரியகலாநிதி

இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக சாட்டிலைட் தொலைக்காட்சி ஆரம்பிச்சத தவிர வேற நல்லதா எதுவும் செய்யாத கலாநிதி மாறன் ...
ஒரு ஜேம்ஸ்பான்ட் படம் (tomarow never dies) , அதுல வர்ற வில்லன்தான் ஞாபகத்துக்கு வர்றாரு . அவரு எப்படி மீடியாவ கையில வைச்சுக்கிட்டு ஒலகத்தையே ஆட்டி படப்பாரோ அதே மாதிரி கலாநிதியும் ஆயிடுவாரோ ?.. ன்னு தோணுது (கிட்ட தட்ட அதான் நடக்குது ).
ஏம்பா அவரு கஷ்டப்பட்டு முன்னேரியிருக்காரு .. அவர வம்புக்கு இழுக்காதிங்கன்னு யாராவது நெனைச்சா இதப் படிங்க ..
  • நான்(நீங்களும் தான் ) நெனைச்ச ஒடனே ஒரு சாட்டிலைட் சேனல்  ஆரம்பிக்க முடியுமா ?
  • யாராவது ஒரு MP நெனச்சா ,அவரோட அப்பாவோட சிலையை பார்லிமென்ட் ல வைக்க முடியுமா ?
  • Spice Jet  ல 37 % stake  வாங்க முடியுமா ?
இந்தியா வுல அரசியல்வாதி யோட வாரிசா இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்கிறதுக்கு கலாநிதி ஒருத்தரே போதும். இவர எதுவுமே பண்ண முடியாதுன்ற அளவுக்கு வளந்துட்டாரு எப்படின்னா  அவர வளத்த பெரியயயய குடும்பமே (கட்சி குடும்பம் எல்லாம் ஒன்னுதாம்பா) சேர்ந்து எதிர்த்தாலும் அவர ஒன்னும் பண்ண முடியாத அளவுக்கு.
ஆரம்பகால கலாநிதி "நிதி"க்காக கட்சியை நம்பி இருந்தாரு .. இப்போ பல கட்சிகளை வாங்கும் அளவுக்கு நிதி சேத்துட்டார் (நிதி மட்டும் தான் மரியாதையோ, நம்பிக்கையோ இல்ல ).

திருவிளையாடல்கள் :
  • ராஜ் டிவி மாதிரி ஒரு சாமான்யரால் நடத்தப்படும்  சேனலை வளர விடாமல்  செய்யறது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் நியூஸ் போட பெர்மிசன்  வாங்கினாங்க.  விஜய் டிவி நியூஸ் போடாததற்கு இவரும் ஒரு காரணம்.
  • தமிழ் நாட்டுல  எல்லா FM  சேனல்ஸ்சுமே டம்மி அப்படிங்கற அளவுக்கு கருத்துகணிப்பு வெளியிடறது ..ஆகஸ்ட் 15  தேதி 12  மணிக்கு ஹலோ FM நல்ல நாட்டுபற்றுள்ள பாட்டுகள போட்டப்ப ..சூர்யன் FM  கழுத்து நீண்ட பொன்னம்மா ..மசாலா பாட்டு போட்டாய்ங்கப்பா.
  •  ஒரு கருத்து கணிப்பு  வெளியிட்டு  மதுரக்காரு கோவிச்சுக்கிட்டு தினகரன் ஆபீசை எரிச்சு மூணு பேரை கொலை பண்ணப்போ வீராவேசமா பேசிட்டு , அடுத்த ஆறு மாசத்துல அழகிரி மாமா(தயாநிதி மாறனோட "மாமா" பேட்டிய படிசுருப்பிங்க  ..) வோட சேர்ந்தது  கலாநிதியை ஒரு நம்பகத்தன்மை இல்லா அரசியல் வாதிஆகிட்டாரு .அந்த மூணு குடும்பத்தினர்  (தினகரன் ஊழியர்கள்)உங்கள எப்படி மதிப்பாங்க ?, அந்த கேஸ் என்னாச்சு?
  • தமிழ் நாட்டுல நடுநிலை மீடியா இல்லாமலே போனதுக்கு கலாநிதிதான் 90 % காரணம் .
புத்திசாலிதனமும் திறமையும் உள்ள எல்லாருமே ஜெயிக்கிறது இல்ல, குறுக்கு வழியோ ? நேர் வழியோ ? கிடச்ச வெற்றியை நல்ல வழியில் பயன்படுத்தாத வரையில் அது நிதி தான் "கலா"நிதி இல்ல.

பி கு
இத எல்லாம் சொல்ல தமிழ் நாட்டுல சொல்ல  ஒரு மீடியா கூட  இல்ல.

Monday, August 16, 2010

என் இனிய இண்டியன் சிட்டிசன்ஸ்

அனைவருக்கும் சொதந்திர தின வாள்துகள் ....அப்படின்னு டமில் டிவி காரய்ங்க சொன்னத மல்லாக்க படுத்துகிட்டே கேட்டு சொதந்திரத்த கொண்டாடின இண்டியன் சிட்டிசன்களே, வணக்கம் .    அதே மாதிரி நான் படுத்து கிட்டே கண்ட கனவு (பகல்)     இந்த 64 வருசத்துல  இந்தியா எவ்வளவு மாறிடுச்சுப்பா.. நெனக்கவே சந்தோசமா இருக்கு ..எல்லா அரசியல் கட்சி தலைவருகளும் சேந்து கொடி ஏத்துராய்ங்க..கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மிட்டாய் குடுக்குறாரு ..(ஆஹா இதுவல்லவோ அரசியல் நாகரிகம்..)அந்த அம்மாவும் மிட்டாய் சாப்பிட்டுட்டு தமிழக அரசின் திட்டங்களின் சிறப்புகளையும், அத இன்னும் நல்லா develope  பண்ண ஐடியாவும்  கொடுத்து பேசுறாங்க ..
அதிலிருந்து சில பிட்டுகள் :
மாண்பு மிகு மைனாரிட்டி அரசு ... sorry (பழக்க தோஷம் )தமிழக முதல்வர் டாக்டர்,முத்தமிழ் அறிஞர் ,கலைஞர், கருணாநிதி (போதும்மா ரொம்ப லென்தா போயிட்டிருக்கு ... )  அவர்களே ..உங்கள் ஆட்சி ஒரு நல்ல ஆட்சி,
இந்தியாவில் குஜராத்திற்கு பிறகு முழு மதுவிலக்கு அமல் படுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் உருவாகிட நம் திராவிட அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகம் மதுவும்  புகையும் இல்லா  மாநிலமாக உள்ளது.
மகாத்மா காந்தியை தவிர தமிழகத்தில் யாருக்கும் சிலை வைக்க வேண்டாம்(கண்ணகி உட்பட..)  என தாங்கள் நேற்று அறிவித்ததை நானும் வரவேற்கிறேன்.
காந்திக்கும்,பெரியாருக்கும் பிறகு அதிக காலம்  "தம்"  மக்களுக்காக உழைத்த தலைவர்
இந்தியாவிலேயே நீங்கள் மட்டும்தான், உங்கள் ஆட்சியில் எதிர்கட்சி  தலைவராக   நான்  இருப்பதற்கு மகிழ்வடைகிறேன்
பெரியாரின் பகுத்தறிவும்,அண்ணாவின் செயல்திறனும் ஒருங்கே உள்ள உத்தமராம்  தங்கள்  அரசை  விமர்சிக்க இந்த எளியவளுக்கு வயதில்லை அதனால் தங்களை  வணங்கி  விடை பெறுகிறேன்
 நன்றி வாழ்க இந்தியா .

அடுத்து முதல்வர்:
முதற்கண் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்..
மாண்பு  மிகு எதிர்கட்சி தலைவி சகோதரி, தங்க தாரகை, டாக்டர்,
செல்வி ஜெயலலிதா அவர்களே ..  தமிழகத்தில் இரண்டு (தி மு க ,அ தி மு க)  கட்சி களை தவிர வேறு கட்சிகளே இல்லாத பற்றாக்குறையை  போக்க,  என்    வேண்டுகோளுக்கிணங்க  கட்சி தொடங்கிய    தம்பி விஜயகாந்த் அவர்களே,   அனைவருக்கும் வணக்கம்...
வாரிசு அரசியலில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லாததாலும்,வயது முதிர்வு காரணமாகவும் ஆட்சியையும்,கட்சியையும்  கலைக்க  நான் எவ்வளவோ  முயற்சி செய்தேன். ஆனால் எதிர்கட்சி தலைவியும் என் சகோதரியுமான ஜெயலலிதா வேண்டாம் என்று  கூறிய ஒரே காரணத்தினால்..அவர் அன்புக்கட்டளையை மீற முடியாமல் நான் இன்னும் என் மக்கள் பணியை தொடர்கிறேன்.

நாம் பெரியாரின்  பாசறையில் இருப்பவர்கள் ஆனாலும்  காந்தியின் குழந்தைகள் என்பதை மறக்கக்கூடாது. காந்தியின் சத்திய சோதனையும், பெரியாரின் புத்தகங்களையும் இளைஞர்கள் படித்து பயனுற வேண்டும்.

நான் இந்த ஆண்டு முதல் என் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்(சகோதரி ஜெயலலிதாவின் அனுமதியோடு ) .

நான் எவ்வளவோ முயற்சித்தும் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் பசுமை தாயகம் மூலம் தமிழகத்தில் இது வரை 2 கோடி மரக்கன்றுகளை நட்ட டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு "பசுமை பெரியார்" விருது வழங்குவதில் நான் மகிழ்வடைகிறேன்.

தமிழீழம் மலர்ந்த ௦10  வது ஆண்டு விழாவிற்கு செல்ல தம்பி வைகோ தலைமையில்
10 பேர் கொண்ட குழுவை அனுப்ப  ஒரு மனதாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.
நன்றி....

அப்பன் பண்ண தப்புல .. திருப்பாச்சி  பாட்டு(சொதந்திர தின சிறப்பு படம் ) ..சத்தம் கேட்டதும்.. ங்கோயால கனவா...
வாழிய பாரத சமுதாயம் வாழ்கவே.. வாழ்க.. வாழ்க..