ஆனந்த விகடன் :
82 ஆண்டு பழமை வாய்ந்த ஆனந்த விகடனை நான் விமர்சிக்கும் நிலை வந்ததே கஷ்ட காலம்தான் , சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே பல எதிர்ப்பு களை சந்தித்த ஆனந்த விகடனே தற்போது நடு நிலையா இருக்கான்னா .. கேள்விக்குறிதான். 1987 ம் ஆண்டு அன்றைய ஆசிரியர் ஒரு துணுக்கு வெளியிட்டதற்காக உள்ளே போடப்பட்டார் ( விகடன் பொக்கிஷம் பார்க்க..22 / 9 / 2010 ) .இன்று அரசியல் விமர்சனம் அப்டின்றது ..ஏதோ நானும் இதை விமர்சிக்கணும் அப்டின்ற அளவுல தான் இருக்கு ..ஒ பக்கங்கள் மட்டும் தான் உருப்படியா இருந்தது அதையும் .. சில பேர் மிரட்டினதால நிறுத்திட்டாங்க (அது குமுதம் போய் இப்போ கல்கி ல வந்து நிக்குது .அங்க எவ்லோ நாள்னு தெரியல ..) ஒரு சினிமா ல மட்டும் .direction சரியில்லை , கேமரா மேன் சரியில்லைனா வாரி எடுப்பாங்க .. ஆனா இங்க அரசியல் விமர்சனம் ன்னு வந்தா மட்டும் ஐயையோ நாமளும் எதாச்சும் சொல்லணுமே ன்னு வாய்க்குள்ளேயே முனுமுனுப்பாங்க. .உதாரணத்துக்கு ஈழம் ஆகட்டும், ஓட்டுக்கு காசு குடுக்குறதாகட்டும், கள்ள ஒட்டு போட்டதாகட்டும்.. ஏதோ பொண்டாட்டிய கொஞ்சுற மாதிரி யே எழுதுவாங்க . ஆனந்த விகடனை பொறுத்த வரை சினிமா வையும்(த்ரிஷா நாய்க்குட்டி பேர் மணி .. ),மத்த இலக்கியத்தையும்!? வச்சு பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க ஒட்டிருவாங்க ..
குமுதம் :
ஆனந்த விகடன் மாதிரி இல்லன்னாலும் ,இதுவும் பழம்பெரும் பத்திரிக்கை தான் .. குமுதம் எப்பவுமே advanced தான் ..ஆனந்தவிகடன் த்ரிஷா நாய்க்குட்டி பேரு சொன்னா .. குமுதம் ல அந்த நாய்க்கு அம்மா பேரு என்ன , த்ரிஷா நாய்க்கும் ரெண்டு கண்ணுதான்பா.. ன்ற அளவுக்கு உருப்படியான தகவல்களை சொல்லுவாங்க .
அப்பறம் சினிமா காரங்களுக்குள்ள சண்ட மூட்டி விடற வேலைய தான் தன் ஜனநாயக கடமையா செய்ஞ்சிட்டு இருக்கு. முன்னல்லாம் இது ஒரு அ தி மு க (தேர்தல் சமயத்துல மட்டும் , )ஆதரவு பத்திரிகை ன்னு சொல்லுவாங்க , ஆனா இப்ப குமுதம் ஆசிரியரோ எடிட்டரோ ஊழல் பண்ணிட்டாருன்னு ஒரு பிரச்சினை வந்து அது கலைஞர் ஐயா வர போச்சு ...அதுக்கப்புறம் ஒரு தி மு க ஆதரவு பத்திரிகை மாதிரி தெரியுது(செம்மொழி மாநாட்ட பத்தி ஓவரா புகழ்ந்தது குமுதம் மட்டும் தான் ... ஞாநி கல்கிக்கு மாறுனாரு, கலைஞர் ஏதோ தொடர் எழுதுறாரு ..) இன்னும் மேட்டர் இருக்கு பா ...
- தமிழ் நாட்டுல சும்மாவே ஜாதிய பத்தி பேசமாட்டாய்ங்க .. இதுல குமுதம் வேற நான் தமிழன்ன்னு(வாரா வாரம் .. ஒரு ஜாதிய பத்தி எழுதினாங்க ,என்ன கொடுமைன்னா தமிழ் மராத்தி ,தமிழ் மலையாளின்னு புதுசு புதுசா ஜாதி பேரு சொன்னாய்ங்க.. ) நாட்டுக்கு தேவையான தொடர்லாம் எழுதுவாய்ங்க . இந்த சாமியார்(நம்ம நித்தியானந்தா தான்..) ஒன்னு எழுதினாருபா, அவரு பேமஸ் ஆனதுக்கு நம்ம குமுதமும் காரணம்.
- ஆனந்த விகடன பொறுத்த வரை நெறைய அரசியல் இல்லாத உருப்படியான விஷயங்கள் வரும்(இளைஞர்கள கொஞ்சம் கவர் பண்ற மாதிரி முயற்சி பண்றாய்ங்க, ஆனா அரசியல் மட்டும் இளைஞர்கள் மண்டைக்குள்ள ஏறாம கவனமா பாத்துக்குறாய்ங்க .. ).. so அரசியலை ஒதுக்கிட்டு பாத்தா ஆனந்த விகடன் படிக்கலாம் ,ஆனா குமுதம் அதுவும் இல்லாம இதுவும் இல்லாம கொஞ்சம் கஷ்டம்தான் ..
- ஆனா நடு நெலமை அப்டின்னு வந்தா மட்டும் ரெண்டுமே ஒன்னு தான்..
- நக்கீரன் அப்டின்னு ஒரு பொலனாய்வு பத்திரிகை வருது .. ஆனா அவிய்ங்க என்ன பொலனாய்வு பண்றாய்ங்கண்ணா.. சாமியாரின் மன்மத லீலைகள், பாதிரியாரின் லீலைகள் ன்னு ஒரு மாதிரியான மேட்டரா போட்டு தான் பொழப்பு நடத்துறாய்ங்க . இதுல என்னன்னா சாமியார் படம், இதர பிட்டுகள் முழுசா பாக்கனும்னா வெப்சைட் மெம்பர் ஆகணும் (எப்பிடியெல்லாம் மெம்பர்ஷிப் பிடிக்கிறாய்ங்க) .. கோபால் சார் நீங்க காட்டுக்கு போய் வீரப்பன கண்டுபிடிச்சதெல்லாம் சரிதான், ஆனா நாட்டுக்குள்ள இருக்க வீரப்பன எல்லாம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ..இப்ப புதுசா புண்ணாக்கு புலிகேசின்னு வடிவேல நம்பி போயிருக்கு நக்கீரன் ..
- போதுங்க மத்த தினகரன், தின மலர் , எல்லாம் வணிக நோக்கமுள்ள பத்திரிகைகள் தான் .. இதுக்கு மேல எனக்கும் கை வலிக்குது.. நெறைய எழுத மறந்தும் போச்சு நம்ம பத்திரிகைகள் மாதிரியே எனக்கும் ..