தெய்வதிண்டே ஸ்வந்தம் நாடே .. ஏ இது தமிழ் ப்ளாக் பா.. ஐயோ நான் தமிழன் கோ ..அய்யய்யோ நான் தமிளங்கோ ...மேட்டருக்கு வருவோம்
- நான் திருவனந்தபுரத்துல இருந்த சமயம், முதல்வராக (அன்றைய)எ.கே அந்தோனி இருந்தார். அப்போ எதிர்கட்சி (கம்யுனிஸ்ட்) மாணவரணி (நிஜமான மாணவரணி)ஒரு ஊர்வலம் நடத்துனாங்க..ஏடா ஓடா அந்தோனி, நசிபிக்கள்ளே எங்கலே..அப்டின்னு கேரள தலைமை செயலகம் முன்னடியே கோசம் போட்டுட்டே போனாங்க.
- தினம் இரவு 8.30 க்கு முதல்வர் வீட்டுக்கு போவார் ..அதுவும் ஒரு அம்பாசடர் கார்ல தனியா(பாதுகாப்புக்கு கூட கட்சி ஆளுங்க இருக்க மாட்டாங்க )போவார் ,
- சமீபத்துல கமல் ஹாசனுக்கு கேரள அரசு சார்பா பாராட்டு விழா நடத்துனாங்க .. அதுல ஒரு நடிகர் கூட கலந்துக்கல .இது எல்லாருக்கும் தெரியும் (கேரளா முதல்வர் இருந்தும்..) .
அடுத்து இங்க முதல்வர் வீட்டுக்குள்ளயே தனியா இருக்க முடியாது ..வெளில போனா கும்பலா கார் இல்லாம போகவே முடியாது ..
இன்னொரு விஷயம் .. நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்தா வரவேற்கலாம் .. நாமலே போனா அது தேவை இல்லை.. கேரளாவுல அப்படிதான் ,அங்க முதல்வர் கொச்சின் வந்தாலும் ,கொல்லம் வந்தாலும் பெரிய வரவேற்பு பொதுக்கூட்டம், பேரணி,இருக்காது .. ஆனா தமிழ் நாட்டுல , தமிழ் நாட்டு முதல்வர்(முதல்வர் மட்டும் இல்ல ..) தமிழ் நாட்டுக்குள்ள மதுரைக்கோ ..கோவைக்கோ ..வந்தா ஏன் வானுயர்ந்த
கட் அவுட் ,ஊரெல்லாம் டியுப் லைட், பேரணி பொதுக்கூட்டம் ன்னு படுத்துராங்கன்னு தெரியலப்பா..
பாராட்டு விழா , இதப்பத்தி நான் சொல்லவே வேண்டாம்..கமலுக்கு பாராட்டுவிழா நடந்த அதே நாள் ல இங்க ஒரு முதல்வர் கலந்துகிட்ட விழா நடந்துச்சு (கலைஞர் நகர் ...), அதுக்கு ரஜினி மட்டும் வராம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்.. அவர் வீடு கார் தாக்கப்படும், அவர் தமிழர் இல்லன்னு கலைஞர் முரசொலி ல எழுதுவாரு..
ஆனா.. கேரளாவுல எந்த நடிகரும் தாக்கப்படல..
அதுக்காக அங்க அரசியல்வாதிகள் புள்ள பூச்சின்னு நெனக்காதிங்க .. அங்கயும் தவறுகள் நடக்கும் ..ஆனா இங்க வார்டு கவுன்சிலர் பண்றத தான் CM பண்ண முடியும்..
நான் எப்பவும் சொல்ற மாதிரி ... கேரளா வுல அரசியல்வாதியா இருகிறதும் ஒண்ணுதான் ,தமிழ் நாட்டுல பொது ஜனமா .. இருகிறதும் ஒண்ணுதான் ரெண்டு பேருக்குமே மரியாதையே இருக்காது .
we know much about the malayalees-in particular their anti tamil stand,nature:enough is enough!
ReplyDeletetill i survive,i will inform my next generation:malayalees dirty role in eradicating tamil community in srilanka
தமிழ் நாட்டு முதல்வர் தமிழ் நாட்டுக்குள்ள .வந்தா ஏன் வானுயர்ந்த
ReplyDeleteகட் அவுட் ,ஊரெல்லாம் டியுப் லைட், பேரணி பொதுக்கூட்டம் ன்னு படுத்துராங்கன்னு தெரியலப்பா..
that is awesome man.. new thought to Tamil nadu ,much needed one.. hey i doubt you are a veteran writer