திமுகழகம் (குடும்பம்): அண்ணா,எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், அன்றைய இளைஞர்கள் அப்படின்னு ஒரு மாபெரும் கூட்டமே சேர்ந்து உருவாக்கிய ஒரு அரசியல் இயக்கம் தான் இந்த திமு கழகம். பெரியார் மணியம்மையை துணைவியாக அறிவித்தபோது(இதுவும் ஒரு காரணம்.. ) ரத்தத்தின் ரத்தங்களான அண்ணா,கருணாநிதி(இத கண்ணீர்த் துளிகள் அப்படின்னு பெரியார் சொன்னார்.. ) பலர் திராவிடர் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிச்சாங்க. ஹிந்தி எதிர்ப்பு, தமிழ் உணர்வுன்னு பல போராட்டங்கள் பண்ணி வளர்ந்து ஆளும் கட்சி ஆகவே உருவெடுத்தது ...இது வரலாறு . அண்ணா, எம்.ஜி.ஆர் ,எஸ்.எஸ்.ஆர்,இன்னும் பல தலைவர்கள்(ராஜாஜி மாதிரி பார்ட் டைம் திராவிட தலைவர் உட்பட .. ) ,ஒரு எழுச்சி மிகு இளைஞர் கூட்டம் எல்லாம் இருந்தும் திமுக படிபடியாக கருணாநிதியின் குடும்ப சொத்தானது ஒரு வேதனையான, மோசமான, ஜனநாயகத்திற்கு மாறான ஒரு சரித்திரம் (கருப்பு சரித்திரம்) . அண்ணாவின் வாரிசு யாரும் அரசியல்லையோ சினிமா லையோ இல்ல .எம் ஜி ஆர் பத்தி தெரியும், எஸ் எஸ் ஆர் அரசியல்லயே இல்ல,எனக்கு தெரிஞ்சு வேற எந்த திராவிட தலைவரோட(தி மு க உதயமானதுக்கு காரணமான ..) வாரிசுகளும் அரசியல்ல இல்ல. கருணாநிதி தன்னை விட செல்வாக்கா கட்சியில் யாரும் இருக்ககூடாது ன்றதுல கவனமா இருந்தார்.கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரை கட்சில இருந்து நீக்கினார் (அது கருணாநிதி செய்த வரலாற்று பிழை, அதனால 13 வருஷம் வனவாசம் இருந்தார். ) ,அடுத்து வைகோ வை நீக்கினார் (வைகோ பெரிய ஆளா வந்திருக்க வேண்டியவர் ) .ஒரு கட்டத்துல கருணாநிதி பேச்சிற்கு எதிர் பேச்சு இல்லாத அளவுக்கு திமுக மாறியது. இன்னைக்கு அண்ணா அறிவாலயம் யாரோட பில்டிங் ன்னு கேக்க முடியாது.திமுகவையும் தான்.இன்னைக்கு அவர் குடும்பம் சம்பந்தபடாத துறையே தமிழ் நாட்டுல இல்ல,(சிலர் இந்திய அளவில் போய்ட்டாங்க).
- ஆரம்ப கால திமுக காங்கிரசுக்கு எதிரி யாக இருந்தாலும் , கொள்கைல கருணாநிதி நேருவ தான் follow பண்றாரு.
- இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா ன்னு கேக்காதிங்க....தகவல் அறியும் சட்டம் மாதிரி எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க .. இது ஏன் நடந்தது அப்படின்னு யோசிங்க அதான் முக்கியம் ...இன்னொரு விஷயம் நான் சொன்னா மாதிரியே இன்னைக்கு நாய்க்குட்டி வளர்க்கலாமன்னு நீயா நானா நடத்துறாங்க ..பாருங்க வேற வழி ..
No comments:
Post a Comment