ஒரு ஜேம்ஸ்பான்ட் படம் (tomarow never dies) , அதுல வர்ற வில்லன்தான் ஞாபகத்துக்கு வர்றாரு . அவரு எப்படி மீடியாவ கையில வைச்சுக்கிட்டு ஒலகத்தையே ஆட்டி படப்பாரோ அதே மாதிரி கலாநிதியும் ஆயிடுவாரோ ?.. ன்னு தோணுது (கிட்ட தட்ட அதான் நடக்குது ).
ஏம்பா அவரு கஷ்டப்பட்டு முன்னேரியிருக்காரு .. அவர வம்புக்கு இழுக்காதிங்கன்னு யாராவது நெனைச்சா இதப் படிங்க ..
- நான்(நீங்களும் தான் ) நெனைச்ச ஒடனே ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்க முடியுமா ?
- யாராவது ஒரு MP நெனச்சா ,அவரோட அப்பாவோட சிலையை பார்லிமென்ட் ல வைக்க முடியுமா ?
- Spice Jet ல 37 % stake வாங்க முடியுமா ?
ஆரம்பகால கலாநிதி "நிதி"க்காக கட்சியை நம்பி இருந்தாரு .. இப்போ பல கட்சிகளை வாங்கும் அளவுக்கு நிதி சேத்துட்டார் (நிதி மட்டும் தான் மரியாதையோ, நம்பிக்கையோ இல்ல ).
திருவிளையாடல்கள் :
- ராஜ் டிவி மாதிரி ஒரு சாமான்யரால் நடத்தப்படும் சேனலை வளர விடாமல் செய்யறது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் நியூஸ் போட பெர்மிசன் வாங்கினாங்க. விஜய் டிவி நியூஸ் போடாததற்கு இவரும் ஒரு காரணம்.
- தமிழ் நாட்டுல எல்லா FM சேனல்ஸ்சுமே டம்மி அப்படிங்கற அளவுக்கு கருத்துகணிப்பு வெளியிடறது ..ஆகஸ்ட் 15 தேதி 12 மணிக்கு ஹலோ FM நல்ல நாட்டுபற்றுள்ள பாட்டுகள போட்டப்ப ..சூர்யன் FM கழுத்து நீண்ட பொன்னம்மா ..மசாலா பாட்டு போட்டாய்ங்கப்பா.
- ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டு மதுரக்காரு கோவிச்சுக்கிட்டு தினகரன் ஆபீசை எரிச்சு மூணு பேரை கொலை பண்ணப்போ வீராவேசமா பேசிட்டு , அடுத்த ஆறு மாசத்துல அழகிரி மாமா(தயாநிதி மாறனோட "மாமா" பேட்டிய படிசுருப்பிங்க ..) வோட சேர்ந்தது கலாநிதியை ஒரு நம்பகத்தன்மை இல்லா அரசியல் வாதிஆகிட்டாரு .அந்த மூணு குடும்பத்தினர் (தினகரன் ஊழியர்கள்)உங்கள எப்படி மதிப்பாங்க ?, அந்த கேஸ் என்னாச்சு?
- தமிழ் நாட்டுல நடுநிலை மீடியா இல்லாமலே போனதுக்கு கலாநிதிதான் 90 % காரணம் .
பி கு
இத எல்லாம் சொல்ல தமிழ் நாட்டுல சொல்ல ஒரு மீடியா கூட இல்ல.
He instructed that the scent acted as an aphrodisiac, 카지노사이트 inflicting a extra aggressive type of gambling
ReplyDelete